×

ரூ.35,587 கோடி வங்கிகளில் இருந்து ஒன்றிய அரசு எடுத்துள்ளது: நாடாளுமன்றத்தில் ஈரோடு எம்.பி. குற்றச்சாட்டு

மொடக்குறிச்சி, டிச. 5: வங்கி திருத்தச் சட்ட மசோதா 2024 குறித்து நாடாளுமன்றத்தில் ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ் பேசியதாவது: எஸ்பிஐ வங்கியில் 40 ஆயிரம் போலிக் கணக்குகளும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10 ஆயிரம் கணக்குகளும், கனரா வங்கியில் 7 ஆயிரம் கணக்குகள், மகேந்திரா வங்கியில் 6 ஆயிரம் கணக்குகள் என மோசடி கணக்குகள் உள்ளதாக தரவுகள் வந்துள்ளன. என்னுடைய (எம்.பி.யின்) வங்கி கணக்கில் ஒரு ஆண்டில் மட்டும் ரூ.10 ஆயிரத்து 640 எடுக்கப்பட்டுள்ளது. இதனை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தான் கூறுவேன். வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இருக்கும்போதே இந்த தொகையை வங்கி எடுத்து முறைகேடு செய்துள்ளது. ஏடிஎம், பேலன்ஸ் அக்கவுண்ட் என பல வகையில் என இந்தாண்டில் ரூ.35 ஆயிரத்து 587 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. போலியான வங்கி கணக்குகளை சரிபார்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதேபோல், 13 ஆயிரத்து 564 வங்கி கணக்குகள் மீது வழக்குகள் உள்ளது. 70 சதவீத வங்கி கணக்குகள் மோசடியான கணக்குகளாக உள்ளது. அவசர கவனம் தேவைப்படும் வங்கி அமைப்பில் உள்ள முக்கிய குறைபாட்டை எடுத்துக்காட்டுகிறது. கேஒய்சி நடைமுறையை வலுவாக கொண்டு வந்து முறைகேடான கணக்குகளை எடுக்க வேண்டும். குடிமக்களின் பாதிப்புகளை ஒன்றிய அரசு உணர வேண்டும். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரம் ரூபாய் செலுத்தி வருகிறது. அந்தத் தொகையை மினிமம் பேலன்ஸ் எனக் கூறி நூதன முறையில் ஒன்றிய அரசு எடுத்துக் கொள்கிறது. அவ்வாறு எடுத்த தொகைகளை அதே கணக்குகளில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். நிதி தேவைப்படுகிறது. சிறு தொழில் செய்பவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சட்ட திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ரூ.35,587 கோடி வங்கிகளில் இருந்து ஒன்றிய அரசு எடுத்துள்ளது: நாடாளுமன்றத்தில் ஈரோடு எம்.பி. குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Erode ,Parliament ,Modakurichi ,KE Prakash ,SBI Bank ,Punjab National Bank ,Canara Bank ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும்...