×

கார்த்திகை தீபத்திருவிழா முதல் நாள் உற்சவம் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் பவனி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, டிச.5: கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் முதல் நாளான நேற்று, அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா எல்லை தெய்வ வழிபாடுகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவம் அண்ணாமலையார் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அப்போது, பஞ்சமூர்த்திகள் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அப்போது, ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். பின்னர், காலை 11.15 மணியளவில் வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் ராஜகோபும் எதிரில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து, மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்நிலையில், இரவு 9 மணியளவில் அளவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து வாணவேடிக்கையுடன் இரவு உற்சவ புறப்பாடு நடந்தது. அப்போது, அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை தரிசித்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டனர். இரவு உற்சவத்தில், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், ஹம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்தனர். தீபத்திருவிழா உற்சவசத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் பவனி வந்ததை தரிசனம் செய்ய, குளிரையும், விட்டு விட்டு பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு வரை திரண்டிருந்து தரிசனம் செய்தனர். அதையொட்டி, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

The post கார்த்திகை தீபத்திருவிழா முதல் நாள் உற்சவம் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் பவனி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Tags : Karthika Deepatri festival ,Panchamurthys ,Bhavani Tiruvannamalai Annamalaiyar Temple ,Mada Road ,Thiruvannamalai ,Bhavani ,Mata Road ,Tiruvannamalai ,Karthikai Deepatri ,Kartika Deepatri Festival ,Panchamurthys Mada Road ,Bhavani Thiruvannamalai Annamalaiyar Temple ,
× RELATED கார்த்திகை தீபத்திருவிழாவை...