×

டிரைவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு மினி வேன் கவிழ்ந்து 3 பெண்கள் பலி சம்பவம்

திருவண்ணாமலை, டிச. 5: வேட்டவலம் அருகே செங்கல் ஏற்றிச் சென்ற மினி வேன் கவிழ்ந்து மூன்று பெண்கள் பலியான சம்பவத்தில் டிரைவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த சு.நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமி, மஞ்சுளா, முத்துலட்சுமி, கூலித் தொழிலாளர்கள். இவர்கள் மூன்று பேரும் கடந்த 11.5.2014 அன்று செங்கல் சூளையிலிருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு, மினி வேனில் பயணம் செய்தனர். அப்போது, செங்கல் மீது மூன்று பெண்களும் அமர்ந்து பயணித்துள்ளனர். மினி வேனை வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் கொள்ளகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த வரதன் மகன் தங்கராசு என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில், தளவாய் குளம் கிராமத்தில் இருந்து கரிப்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது. திடீரென்று தலைக்குப்புற மினி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மூன்று பெண்களும் பலியானார்கள். இதுதொடர்பாக வேட்டவலம் போலீசார், மினி வேன் டிரைவர் தங்கராசு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசூர்யா நேற்று தீர்ப்பளித்தார். அதில், விபத்தை ஏற்படுத்திய டிரைவர் தங்கராசுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹16,500 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

The post டிரைவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை திருவண்ணாமலை கோர்ட் தீர்ப்பு மினி வேன் கவிழ்ந்து 3 பெண்கள் பலி சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai court ,Tiruvannamalai ,Vettavalam ,Thiruvannamalai district ,
× RELATED நினைத்தாலே முக்தி தருபவர் அண்ணாமலையார் #Tiruvannamalai #annamalaiyartemple