ஜெயங்கொண்டம், டிச.3: ஜெயங்கொண்டத்தில் தப்பி ஓடிய கைதியை போலீசார் 15 நிமிடத்தில் பிடித்தனர். ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்க அழைத்து சென்ற போது தப்பி ஓடிய போக்சோ வழக்கு கைதியை 15 நிமிடத்தில் மடக்கிப்பிடித்து போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடையக்குறிச்சியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரது மகன் பாலாஜி (23). இவர், பாலியல் பலாத்கார வழக்கில் போக்சோ சட்டத்தில் ஆண்டிமடம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 26ம் தேதி ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று பாலாஜிக்கு ஆண்மை தன்மை பரிசோதனை செய்வதற்காக சிறைச்சாலையில் இருந்த கைதி பாலாஜியை ஆண்டிமடம் போலீசார் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை முடிந்து மீண்டும் கைதி பாலாஜியை ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைக்க போலீசார் சிறைக்கு உள்ளே அழைத்து சென்றனர். அப்பொழுது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் போலீசாரை தள்ளிவிட்டு கைதி பாலாஜி தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆண்டிமடம் போலீசார் முத்துகிருஷ்ணன் மற்றும் முருகன் ஆகியோர் உடனடியாக பாலாஜியை கைது செய்ய தங்களது தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜெயங்கொண்டம் வெள்ளாழத் தெருவில் கைதி சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான தலைமை காவலர் முருகன் ராஜேந்திரன் மற்றும் ஆண்டிமடம் போலீசார் உதவியுடன் போக்சோ கைதி பாலாஜியை 15 நிமிடத்தில் மடக்கி பிடித்து மீண்டும் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post வாள் சண்டையில் மோதும் மாணவர்கள் ஜெயங்கொண்டத்தில் தப்பி ஓடிய கைதியை 15 நிமிடத்தில் பிடித்த போலீசார் appeared first on Dinakaran.