×

குன்னம் அருகே அரசு தொடக்க பள்ளிக்குள் புகுந்த மழைநீர்

குன்னம், டிச. 3: குன்னம் அருகே எழுமூர் கிராமத்தில் மழையால் சேதமடைந்த அரசு தொடக்கபள்ளியை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எழுமூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் 2 கட்டிடங்களில் மழை நீர் மேல் கூரை வழியாக உள்ளே வந்தது. மழை நீரால் சுவரில் மழை நீர் ஊறி சேதமடைந்தது. மேலும் பள்ளி மாணவர்கள் அமரும் இடத்தில் தண்ணீர் புகுந்துதேங்கி நிற்கிறது. தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ரகுபதி, ஊராட்சி செயலாளர் ராஜா உள்ளிட்டார் பள்ளியில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல்கொடுப்பதாக கூறியுள்ளனர். அதிகாரிகள் மேற்கண்ட பள்ளியினை ஆய்வு செய்து பள்ளி சேதமடைந்த கட்டிடத்தை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

The post குன்னம் அருகே அரசு தொடக்க பள்ளிக்குள் புகுந்த மழைநீர் appeared first on Dinakaran.

Tags : Government Primary School ,Kunnam ,Cunnam ,Orati Samba ,Elamur ,Ulamur ,Vatom Veppur Uradachi Union ,Perambalur District ,Dinakaran ,
× RELATED தோணிரேவு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வண்ண சீருடைகள்