- மின்சார வாரியம்
- பெரம்பலூர்
- தமிழ்நாடு மின் ஊழியர் சங்கம்
- கண்காணிப்பு பொறியாளர்
- மின் வாரியம்
- பெரம்பலூர் 4 ரோடு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பெரம்பலூர் நான்கு ரோடு
- தின மலர்
பெரம்பலூர், டிச. 3: பெரம்பலூர் 4 ரோடு அருகே மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, நேற்று 2ஆம் தேதி மாலை, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்பநிலை காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரியத்தை பல கூறுகளாகப் பிரித்து, தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை கைவிடவேண்டும்.
ஊதிய உயர்வு 25-சதவீதம் வழங்கவேண்டும், பேச்சுவார்த்தை முடியும் வரை இடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு, மின்சார வாரியம் நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்பலூர் வட்டக் கிளை சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் கோரிக்கைகளை விளக்கினார். இதில் வட்ட பொருளாளர் கண்ணன், சிஐடியூ மாவட்ட பொருளாளர் ரெங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர் புவனேஸ்வரி, கோட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், பாலகிருஷ்ணன், மணி, தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post மின்வாரிய அலுவலகம் எதிரே மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.