சூளகிரி, டிச.4: சூளகிரியில் இருந்து பேரிகைக்கு செல்லும் ரிங்ரோடு தார்சாலையில் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால், பல வாரங்களுக்கு முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டது. தற்போது பெய்த தொடர் மழையால் சாலை மேலும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நேற்று சூளகிரி வட்டார வளர்சி அலுவலர்கள் உமா சங்கர், சிராஜ் தீன், திமுக ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ், வார்டு மெம்பர் அஷ்பர், ஊராட்சி செயலாளர் வெங்கடேஷ், ஊர் பிரமுகர் அன்பு, காதர்செரிப், வரதன் மற்றும் பலர் பழுதடைந்த சாலையை பொக்ைலன் மூலம் சீரமைத்தனர்.
The post பழுதடைந்த சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.