சோபாவில் அமர்ந்த நிலையில் வெள்ளி தொழிலாளி சாவு

சேலம், டிச.4: சேலம் பொன்னம்மாபேட்டை சக்தி நகரை சேர்ந்தவர் வேலு (34). வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழனியம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 12 மற்றும் 10 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் பிரிந்து சென்றுவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தபோது வேலு அவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது பழனியம்மாள் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்றுமுன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த வேலு ஷோபாவில் அமர்ந்தார்.

வழக்கமாக அங்கேயே இருந்துவிட்டு படுப்பதற்காக வேலு செல்வார். அதன்படி அங்கேயே அமர்ந்திருந்தார். நேற்று காலை 8 மணிக்கு பழனியமாள் எழுந்து பார்த்தபோது, வேலு ஷோபாவிலேயே இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர் அருகில் சென்று பார்த்தபோது சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்தபோது, வேலு உயிரிழந்திருந்தது தெரியவந்தது. கணவரின் உடலை பார்த்து கர்ப்பிணி மனைவி கதறிஅழுதார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலு, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

The post சோபாவில் அமர்ந்த நிலையில் வெள்ளி தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Related Stories: