சேலம், நவ.29: சிறப்பாக பணியாற்றிய சேலம் தடவியல்துறை உதவி இயக்குனருக்கு முதல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் தடயஅறிவியல் துறை செயல்பட்டு வருகிறது. எங்கு கொலை சம்பவங்கள் நடந்தாலும், தடயஅறிவியல் துறையினர் நேரடியாக சென்று ஆய்வு செய்வர். கொலை சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டிருக்கலாம்?. கொலையா, தற்கொலையா? என ஆய்வு செய்வர். மேலும் அங்கு கிடைக்கும் தடயங்களை சேகரித்து காவல்துறையின் புலனாய்வுக்கு தடயஅறிவியல் துறையினர் கொடுத்து உறுதுணையாக இருந்து வருகின்றனர். 38 மாவட்டத்திற்கும் ஒவ்வொரு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளை தேர்ந்தெடுத்து முதல்வர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான முதல்வர் விருதை பெற தடயவியல் துறையின் சென்னை இயக்குனர் சிவப்பிரியா, சேலம் தடயவியல் உதவி இயக்குனர் வடிவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுடன் ₹20ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதை வழங்குவார் என கூறப்படுகிறது. விருது பெற தேர்வானவர்களை அதிகாரிகள் பாராட்டினர்.
The post சிறப்பாக பணியாற்றிய சேலம் தடயவியல் துறை உதவி இயக்குனருக்கு முதல்வர் விருது அதிகாரிகள் பாராட்டு appeared first on Dinakaran.