பூலாம்பட்டி சுற்றுலா தலம் வெறிச்சோடியது

இடைப்பாடி, டிச.2: பெஞ்சல் புயல் காரணமாக பூலாம்பட்டி சுற்றுலா தலம் வெறிச்சோடிய நிலையில், கிரிக்கெட் வீரர் நடராஜன் படகு சவாரி செய்து மகிழ்ந்தார். சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் செயல்படும் கதவணை மின் நிலையத்தில் மின் உற்பத்திக்காக ஆண்டு முழுவதும் அங்குள்ள காவிரியில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இதனால், அப்பகுதியே பச்சை பசேல் என காணப்படும் நிலையில் குட்டி கேரளா என்றழைக்கப்படுகிறது.

வார விடுமுறை நாட்களில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும், அண்டைய மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்வர். இந்நிலையில், பெஞ்சல் புயல் மழை காரணமாக நேற்று மக்கள் வீடுகளில் முடங்கியதால், பூலாம்பட்டி சுற்றுலா தலம் வெறிச்சோடிது. அங்குள்ள படகு இல்லம் உள்ளிட்ட பொழுது போக்கிடங்கள் ஆட்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. ஒரு சில சுற்றுலா பயணிகள் மட்டும் வந்திருந்தனர். அவர்கள் குடும்பத்தோடு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சின்னப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான நடராஜனும் சுற்றுலா வந்திருந்தார். அவரை அடையாளம் கண்ட சுற்றுலா பயணிகள் குதூகலித்தனர். மேலும், நடராஜனுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர், காவிரியில் விசைப்படகில் சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தார்.

The post பூலாம்பட்டி சுற்றுலா தலம் வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Related Stories: