×

பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கு; மேலும் 2 பேர் சரணடைந்தனர்

அண்ணாநகர்: பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கில் மேலும் இரண்டு பேர் நீதிமன்றத்திலும் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நதியா. இவர் பாஜ மகளிரணி மாநிலச் பொதுச்செயலாளர் உள்ளார். இவரது கணவர் சீனிவாசன்(45). இவர் கடந்த 14ம்தேதி 7 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். இதுசம்பந்தமாக கடந்த 15ம் நொளம்பூர் காவல் நிலையத்தில் 5 பேர் சரணடைந்தனர்.

இதுபற்றி திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி, யானைகவுனி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (27), ராஜேஷ் (20), கனேஷ்(40), சரவணன்(27) மற்றும் மகேஷ்(28) ஆகிய 5 பேரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், ‘’சீனிவாசனை வெட்டியவர்கள் நாங்கள்தான்’’ என்று இரண்டு பேர், காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது யானைகவுனி பகுதியை சேர்ந்த ரவுடி சிவா(எ) சிவகுமார், பிரகாஷ் (எ) மிளகாய் பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்தது.

இந்தநிலையில் இவ்வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் பாலாஜி(எ) கோழி பாலாஜி (27) சரண் அடைந்தார். கார்த்திகேயன்(25) என்பவர் நேற்றிரவு திருமங்கலம் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதன்பிறகு கார்த்திகேயனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

The post பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கு; மேலும் 2 பேர் சரணடைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Baja Pramukh ,Annanagar ,Nadia ,Chennai Thirumangalam region ,General Secretary of State ,Baja Makhlirani ,Sinivasan ,
× RELATED பெரியார், முதல்வர் குறித்து அவதூறு: பாஜ பிரமுகர் கைது