×

போதைப்பொருள் வழக்கு: என்.சி.பி. காவலர் கைது

சென்னை: மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருள் விற்ற வழக்கில் என்.சி.பி. காவலர் ஆனந்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தியாகராய நகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் காவலர் ஆனந்தை கைது செய்தனர். போதைப்பொருள் வழக்கில் ஏற்கெனவே கைதான அசோக்நகர் காவலர் ஜேம்ஸ் வாக்குமூலம் அடிப்படையில் காவலர் ஆனந்த் கைது செய்யப்பட்டார். ஆனந்த் என்பவரிடம் போதைப்பொருளை வாங்கி விற்பனை செய்ததாக அசோக்நகர் காவலர் ஜேம்ஸ் வாக்குமூலம் அளித்தார்.

The post போதைப்பொருள் வழக்கு: என்.சி.பி. காவலர் கைது appeared first on Dinakaran.

Tags : NCP Guard ,Chennai ,NCP ,Guard ,Anand ,Deputy Commissioner ,Thiagaraya Nagar ,Constable ,Ashoknagar ,N.C.P. Police ,Dinakaran ,
× RELATED மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்ற வழக்கில் என்.சி.பி. காவலர்கள் கைது