×

மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்ற வழக்கில் என்.சி.பி. காவலர்கள் கைது

சென்னை: சென்னையில் மெத்தபெட்டமைன் போதை பொருளை பயன்படுத்துபவர்களையும், போதை பொருளை விற்பனை செய்பவர்களையும் கைது செய்யும் நோக்கில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இதில் தொடர்புடைய அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். போதை பொருளை விற்பனை செய்பவர்கள் பெங்களூருவை சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தவகையில் சென்னை வடபழனியில் மெத்தபெட்டமைன் பயன்படுத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது சுரேந்திரநாத், காவலர் ஜேம்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ‘கிரைண்டர்’ என்ற செயலி மூலமாக தொடர்புகொண்டு மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்து வந்த நபர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

காவலர் ஜேம்ஸிடம் விசாரணை மேற்கொண்டபோது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணிபுரியும் ஆனந்த் என்ற காவலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களின் வாங்கி கணக்கை ஆய்வு செய்து பார்த்தபோது சுமார் ரூ.35 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் பல இடங்களுக்கு மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுமட்டுமல்லாது இதில் சமீர் என்ற காவலரும் உடந்தையாக இருப்பது தெரியவந்தது. காவலர்கள் மூலம் போதைப்பொருள் எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது, எங்கிருந்து போதைப்பொருள் கிடைக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

போதைப்பொருள் விற்பனையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணிபுரியும் காவலர்களே சிக்கியுள்ள நிலையில் இதில் மேலும் யாருக்கேனும் தொடர்புள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

The post மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்ற வழக்கில் என்.சி.பி. காவலர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : NCP ,CHENNAI ,Special Police Force ,Bengaluru ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கு: என்.சி.பி. காவலர் கைது