×

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் ஐகோர்ட் தீர்ப்பு

மதுரை: நெல்லை மாவட்டம், மாஞ்சோலை எஸ்டேட் பிபிடிசி நிறுவனம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தொழிலாளர்களின் விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். அரசு தெரிவித்துள்ள அனைத்து சலுகைகளையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசின் சலுகைகள் ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : ICOURT VERDICT ,Madurai ,Aycourt Madurai ,Nella district ,Manchole Estate ,Chennai High Court ,Icourt ,Dinakaran ,
× RELATED சோழவந்தானில் விபத்துகளை தடுக்க என்ன நடவடிக்கை?: ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி