டெல்லி: மக்களவையில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுப்பால் வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்து மக்களவையில் திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசினார்.