தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கிலிருந்து திடீர் விலகல்

புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற வேண்டுமென கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பால் அதிருப்தி அடைந்த ஒன்றிய பாஜ அரசு, தேர்வுக்குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு, அந்த சமயத்தில் நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா, நீதிபதி தீபன்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தற்போது தலைமை நீதிபதி ஆகிவிட்டதால் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.

The post தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கிலிருந்து திடீர் விலகல் appeared first on Dinakaran.

Related Stories: