தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் அமைந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் தாஜ்மகாலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மாநில சுற்றுலா துறை அலுவலகத்துக்கு இமெயில் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சுற்றுலா துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் இதர குழுக்கள் தாஜ்மகால் விரைந்தன. தாஜ்மகால் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அங்கிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது புரளி என்பது உறுதியானது.

The post தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: