புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்: தற்போதுள்ள விதிகளின்படி, காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதி இல்லை. அனைத்து ரயில்களின் காத்திருப்போர் பட்டியல் நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கூடுதல் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இந்திய ரயில்வே பண்டிகைகள், விடுமுறை நாட்கள் போன்றவற்றின் போது சிறப்பு ரயில்களை இயக்குகிறது. மேலும் நிரந்தர மற்றும் தற்காலிக அடிப்படையில் ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகிறது.
2024ம் ஆண்டில் ஹோலி மற்றும் கோடை விடுமுறையின் போது பயணிகளின் கூடுதல் கூட்டத்தை சமாளிக்க 13,523 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. துர்கா பூஜை,தீபாவளிபண்டிகை, சத் பூஜை சமயங்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, 2024 அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் சுமார் 1.8 கோடி பயணிகளுக்கு சேவை செய்ய 7983 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.
The post ‘வெயிட்டிங் லிஸ்ட்’ பயணிகள் முன்பதிவு பெட்டியில் ஏற தடை: ரயில்வே அமைச்சகம் அதிரடி appeared first on Dinakaran.