அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அய்யாவு மஹாலில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி மற்றும் மாநில, மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாஜகவின் செயல்பாடு, உறுப்பினர் சேர்க்கை குறித்தும், இலக்கை எட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
The post லண்டனுக்கு சென்று 3 மாதத்திற்கு பிறகு பாஜக அலுவலகத்திற்கு வந்த அண்ணாமலைக்கு வரவேற்பு appeared first on Dinakaran.