சென்னை: ஆரணியாற்றின் வெள்ள உபரி நீர், சென்னையின் குடிநீர் பயன்பாட்டிற்காக பூண்டி நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. ஆரணியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது, அதன் கீழ் உள்ள அணைக்கட்டுகளுக்கு அளிக்க வேண்டியது போக மீதமுள்ள ஒருபகுதியில் விநாடிக்கு 200 கன அடி நீர், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ள பூண்டி உள்பட 4 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 11.760 டி.எம்.சி.யில், 6.950 டி.எம்.சி மட்டுமே நிரம்பியுள்ள நிலையில், ஆரணியாற்றின் உபரி நீர் வருகையால் கூடுதல் நீர் சேமிக்கப்படும் என நீர்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
The post ஆரணியாற்றின் வெள்ள உபரி நீர், பூண்டி நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்பட்டது! appeared first on Dinakaran.