×
Saravana Stores

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (02.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த அதிகனமழையால் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவு புதுச்சேரி – மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது.

புயலின் தாக்கத்தால் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் பிரதான சாலைகள், தெருக்களில் ஆறுபோல் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. மாநிலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (02.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த அதிகனமழையால் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை (02.12.2024) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அறிவித்துள்ளார்.

 

 

The post புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Viluppuram ,FENNEL ,Fengel Storm ,Bengal ,Viluppuram Districts ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (02.12.2024) விடுமுறை