×
Saravana Stores

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு 2 பிடிஓக்கள் உட்பட 10 பேர் மீது வழக்கு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம் மரவக்காடு ஊராட்சியில் கடந்த 2016-20ம் ஆண்டில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில்முறைகேடு நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து, பொதுமக்கள் பலரும் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், 2016-20 ஆண்டுகளில் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றிய சிவகுமார் (55), மணிமாறன் (49), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வன் (61), கஸ்தூரி (56), ராஜா (61), இளநிலை பொறியாளர் சண்முகசுந்தரம் (57), பணி மேற்பார்வையாளர்கள் பிரபாகரன் (52), சாந்தி (50) மற்றும் மரவக்காடு ஊராட்சி செயலர்கள் லட்சாதி (49), தனபால் (51) ஆகிய 10 பேர் மீது ஊழல் செய்துள்ளதாக லட்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்தது.

The post பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு 2 பிடிஓக்கள் உட்பட 10 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Thiruvaroor District ,Mannarkudi Union ,Maravakkad ,Uradchi ,Prime ,Minister ,Mannarkudi Municipal Union ,Dinakaran ,
× RELATED ஜனாதிபதியின் திருவாரூர் வருகை ரத்து