கோவில்பட்டி : தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை தெற்குத் தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (41). இவர், 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் விசாரித்த போது தர்மராஜ் சிறுமியை மிரட்டி கர்ப்பிணியாக்கியது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கட்டிடத் தொழிலாளி தர்மராஜை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.
The post கயத்தாறு அருகே 16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது appeared first on Dinakaran.