இந்நிலையில் 7 மாவட்டங்களிலும் மொபைல் இன்டர்நெட் சேவைக்கான தடையை மேலும் மூன்று நாட்களுக்கு நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல் மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.23ம் தேதி வரை விடுமுறை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி அங்கு நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இப்போது இந்த விடுமுறை நவ.23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜிரிபாமில் 6 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து முதல்வர் பிரேன்சிங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வீடியோ செய்தியில், ‘‘மூன்று அப்பாவி குழந்தைகள் மற்றும் மூன்று அப்பாவி பெண்கள் குக்கி தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு கொல்லப்பட்டதை கண்டிப்பதற்கு நான் ஆழ்ந்த சோகத்துடனும், கோபத்துடனும் இங்கு நிற்கிறேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்படுவது மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும். இதுபோன்ற காட்டுமிராண்டி தனமாக செயல்களுக்கு எந்த நாகரீக சமுதாயத்திலும் இடமில்லை. இந்த தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. விரைவில் இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The post மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.23 வரை விடுமுறை: இன்டர்நெட் தடை appeared first on Dinakaran.