சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளைப் பெற அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம்: அதானி மீது பாயும் குற்றச்சாட்டு

நியூயார்க்: இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு அளிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் அதானி மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளைப் பெற அமெரிக்க அதிகாரிகளுக்கு 25 கோடி டாலர்களுக்கு மேல் லஞ்சமாக கொடுக்க ஒப்புக்கொண்டதாக அதானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனினும், தனது தவறை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்து, அதானி தனது திட்டத்திற்காக பெரும் தொகையை திரட்டினார் என்றும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. அதானியின் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக் கூறி நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவுதம் அதானி மட்டுமின்றி அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் அதானி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து அதானி குழும நிறுவனங்கள் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

The post சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளைப் பெற அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம்: அதானி மீது பாயும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: