குறிப்பாக 3 பில்லியன் டாலருக்கு அதிகமாக கடன்கள் மற்றும் பாத்திரங்களை திரட்டியதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதானியின் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது என கூறி நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதில் கவுதம் அதானியுடன் அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கவுதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்த்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து பங்குகள் விலை கடும் சரிவடைந்து வருகிறது. அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை 10 சதவீதம் சரிந்து விற்பனையாகிறது. அதேபோல அதானி போர்ட் பங்கு விளையும் 10 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. அதானி பவர் நிறுவன பங்கு விலை 13 சதவீதம் சரிவு; அதானி எனர்ஜி நிறுவன பங்கு விலை 20 சதவீதம் சரிந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கு விலை 17 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலை 13 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை 10 சதவீதம் சரிந்து வரத்தமாகி வருகிறது.
The post அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு.. பங்குச்சந்தையில் அதானி குழும நிறுவன பங்குகள் விலை கடும் சரிவு..!! appeared first on Dinakaran.