மதுரை தென்பழஞ்சூர் பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையத்தை நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து வந்து வந்தது. பேருந்து எல்லிஸ் நகர் பாலத்தில் ஏறி இறங்கிய போது பேருந்தில் பிரேக் பிடிக்காததால் பேருந்தை கட்டுப்படுத்துவதற்காக ஓட்டுநர் முயற்சி செய்தார். எல்லிஸ் நகர் பகுதி மிகவும் நெருக்கடியான பகுதி ஆகும்.
அதிக அளவில் மக்கள், மற்றும் வாகனங்கள் இருக்க கூடிய பகுதி. எனவே மற்றவர்கள் மீது பேருந்து மோதாமல் இருக்க பக்கவாட்டில் இருக்கக்கூடிய சிமெண்ட் தடுப்புகள் மீது தடுத்து நிறுத்துவதற்காக முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பகுதியில் நிறுத்தி வைத்திருந்த 3க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் மீது மோதியது. பேருந்து மோதியதில் அந்த ஆட்டோக்கள் முழுமையாக சேதமடைந்தது.
நல்வாய்ப்பாக இந்த விபத்தினால் அந்த பகுதியில் யாருக்கும் எவ்வித தேசதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து அதிகாரிகளும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆட்டோ மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post மதுரையில் பிரேக் பிடிக்காத அரசு பேருந்து ஆட்டோக்கள் மீது மோதி விபத்து appeared first on Dinakaran.