மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மலம் கழித்த பின்னரும் சாப்பிடுவதற்கு முன்பும் சோப்பு போட்டு கை கழுவாமல் இருப்பதால் வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை, காலரா போன்ற நோய்கள் வரக்கூடும் என்றும் மருத்துவர்கள் அறிக்கை வாயிலாக தெரிவிக்கின்றனர். கழிப்பறையை அவ்வப்போது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும்.கழிப்பறை இல்லாத வீடுகள் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியாவும் அடுத்து சீனாவும் உள்ளதாக ஆய்வறிக்கை தகவல். இந்தியாவில் வளர்ச்சியில் பின் தங்கிய மாநிலமான பீகாரைவிட கழிப்பறை வசதியில் பின் தங்கியுள்ள மாநிலம் தமிழ்நாடு. நிறைய பள்ளிகளில் கழிப்பறை வசியில்லாததால் பெண்கள் படிப்பை நிறுத்துகின்ற நிலை உள்ளதாக செய்தி தகவல்கள் கவலையளிக்கிறது. விழிப்புணர்வு தேவை. கிராமங்களில் வீடுகள்தோறும் கழிப்பறை கட்டிக் கொடுப்பதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். கழிப்பறை இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
The post உலக கழிப்பறை தினம் இன்று!!.. எல்லா வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பறை கட்டாயம் வேண்டும் : ஜி.கே.மணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.