சென்னை: எல்.ஐ.சி. இணையதள முகப்பு பக்கம் இந்தியில் இருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி திணிக்கப்பட்டுள்ளது. எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே ஒன்றிய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது எல்ஐசி இணையதளம் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. அனைத்து மக்கள் பயன்படுத்தும் வகையில் இணையத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்தில் மாற்ற வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post எல்.ஐ.சி. இணையதள முகப்பு பக்கம் இந்தியில் இருப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் appeared first on Dinakaran.