புதுக்கோட்டை,நவ.19: புதுக்கோட்டை தாலுகா பகுதியில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வராந்திரா பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். அப்போது புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் உரிமை மற்றும் மறுவாழ்வு மையத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மாவட்ட கலெக்டர் அருணாவை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் 30 பேருக்கு கறம்பக்குடி தாலுகா திருமணஞ்சேரி அருகே பட்டத்திகாடு கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டாவை ஏற்கனவே பணியாற்றிய கலெக்டர் வழங்கினார். அந்த கிராமத்தில் எவ்வித வசதிகளும் இல்லை நீண்ட தூரம் என்பதாலும் நாங்கள் புதுக்கோட்டைக்கு பல்வேறு பணிகளுக்காக வருவதால் இங்கிருந்து அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அதிக தூரம் இருக்கிறது. அந்த கிராமத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் தற்பொழுது எங்களுக்கு புதுக்கோட்டை தாலுகா அல்லது அதன் ஒட்டி உள்ள பகுதிகளில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post புதுக்கோட்டை தாலுகா பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் appeared first on Dinakaran.