புதுக்கோட்டை,நவ.19: புதுக்கோட்டையில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 542 மனுக்கள் மீது உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்று கலெக்டர் அருணா அறிவுறுத்தி உள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது; பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 542 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 542 மனுக்கள் மீது உடனடி விசாரணை appeared first on Dinakaran.