நீடாமங்கலம், நவ. 19: நீடாமங்கலம் பகுதியில் தொடர்ந்து செய்துவரும் மழையால் புது பாலம் பாமனியாறு சட்ரஸில் சீரிப்பாயும் மழை நீர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக இரவு பகலுமாக மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த மலை நீடாமங்கலம் பகுதியில் சாகுபடி செய்துள்ள சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு ஏற்றதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் விவசாயிகள் விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை விவசாயிகள் விலை நிலங்களில் நீர்தேங்காமல் வடியவைக்க முடிகிறது. இந்திலையில் நிலையில் நீடாமங்கலம் கோரையாறு தலைப்பிலிருந்து பிரிந்து செல்லும் பாமனியாறு மன்னார்குடி வழியாக முத்துப்பேட்டை வரைசெல்கிறது. இந்த ஆற்றில் பாசன வசதியும், வடிகால் வசதியும் உள்ளது.
இந்த ஆற்றில் நீடாமங்கலம் அருகில் உள்ள நகர், சித்தமல்லி, வாசுதேவமங்கலம், பரப்பனாமேடு, பூவனூர், ராயபுரம், காளாச்சேரி, காளாஞ்சிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சேர்ந்த சம்பா மற்றும் தாளடி வயல்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிகாளாக மாமனியாற்றில் கலக்கிறது. இந்த மழைநீர் புதுபாலத்தில் சீரிப்பாய்ந்து செல்கிறது. அதேபோன்று மாமணி ஆற்றில் நீடாமங்கலம் அருகே ராஜபைன்சாவடி, கானூர் புதுப்பாலம், பாமனி, சேரன் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு பாசன வாய்க்கால் பிரிந்து பல்வேறு கிராமங்களுக்கு பாசன நீரை கொடுத்து சாகுபடி செய்யப்படுகிறது.
The post நீடாமங்கலத்தில் தொடர்மழை புதுபாலம் பாமனியாறில் மழைநீர் சீரிப்பாய்கிறது appeared first on Dinakaran.