×
Saravana Stores

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களில் முதன்முறையாக சீனாவை முந்தியது இந்தியா: அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை

வாஷிங்டன்: சர்வதேச கல்வி நிறுவனம் (ஐஐஇ) வெளியிட்ட சமீபத்திய வருடாந்திர கணக்கெடுப்பின்படி, அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவில் உயர்கல்வி படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் முந்தைய கல்வி ஆண்டை விட, இந்த கல்வியாண்டில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரம் சீன மாணவர்கள் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2009-10ம் கல்வியாண்டில் இருந்து கணக்கெடுத்தால் அதிகளவில் சீன மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வந்தனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை 2019-20ம் ஆண்டு முதல் படிப்படியாகக் குறைந்துள்ளது. அதிகபட்சமாக இந்த கல்வியாண்டில் 3,72,532 சீன மாணவர்கள் படித்து வந்தனர்.

இதற்கிடையில், 2020-21ம் கல்வியாண்டிலிருந்து இந்திய மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. அதன்படி 2023-24ம் கல்வி ஆண்டில் 3,31,602 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்துள்ளனர்; அதே சீன மாணவர்கள் எண்ணிக்கை 2,77,398 ஆக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது. சமீபத்திய தேர்தலில் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அமெரிக்காவில் உள்ள சீனப் பிரஜைகளின் கவலை அதிகரித்துள்ளது. அதேநேரம் பல்வேறு துறைகளில் சீனர்களை விட இந்தியர்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களில் முதன்முறையாக சீனாவை முந்தியது இந்தியா: அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,China ,US ,US State Department ,Washington ,Institute of International Education ,IIE ,United States ,
× RELATED டிரம்ப் வெற்றியால் டாலர் சிட்டியில்...