இங்கிலாந்து: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 36% பேருக்கு மனஅழுத்தம் ஏற்படுவதாக லான்செட் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாராந்திர மருத்துவ இதழான லான்செட். சர்க்கரை நோய் தொடர்பான பாதிப்பு குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உட்கொள்வதில் இயல்பான நிலை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 63% பேர் அச்சம் உணர்வு இருந்து கொண்டே இருப்பதாகவும், 28% பேருக்கு நோய் குறித்து நேர்மறையாக யோசிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சுலின், மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து கொள்ள முடியும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 36% பேருக்கு மனஅழுத்தம் ஏற்படுவதாக லான்செட் மருத்துவ அறிக்கையில் தகவல்..!! appeared first on Dinakaran.