மெக்சிகோ : மெக்சிகோவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் மகுடம் சூடியுள்ளார். ஆனால் இது இன வெறியுடன் நடத்தப்பட்ட அழகி போட்டி என சமூக வலைத்தளங்களில் பல்லாயிரம் பேர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மெக்சிகோ தலைநகரான மெக்சிகோ சிட்டியில் 73வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. மொத்தம் 125 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். மாலை நேர அங்கி அல்லது சாதாரண உடை, நீச்சல் உடை, தேசிய உடை அலங்காரம், ஆடல் பாடல் போன்ற இதர திறமைகளை கண்டறியும் போட்டி மற்றும் கேள்வி பதில் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
பரபரப்பான இறுதிச் சுற்றில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 21 வயதான விக்டோரியா கெயர் 2024ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக மகுடம் சூட்டப்பட்டார். இவரே டென்மார்க்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரபஞ்ச அழகியாவார்.இரண்டாவது இடம் நைஜீரியாவை சேர்ந்த சிடிம்மா அடெட்ஷினாவுக்கும் மூன்றாவது இடம் மெக்சிகோவை சேர்ந்த மரியா ஃபெர்னாண்டாவுக்கும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், சிடிம்மா அடெட்ஷினாவை பிரபஞ்ச அழகியாக ஏன் தேர்வு செய்யவில்லை என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த அழகி போட்டி நேர்மையற்ற முறையிலும் இனவெறியோடும் நடத்தப்பட்டதாக ஏராளமானோர் குற்றம் சாட்டுகின்றனர். நீயே வெற்றி நட்சத்திரம் என்று நைஜீரிய அழகி நிடிம்மா அடெட்ஷினாவை புகழ்ந்து வருகின்றனர்.
The post நைஜீரிய அழகி சிடிம்மாவை ஏன் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யவில்லை : இனவெறி புகாரை எழுப்பிய நெட்டிசன்கள்!! appeared first on Dinakaran.