ரியோ டி ஜெனிரோ: ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு பிரேசிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி 5 நாட்கள் பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா ஆகியா நாடுகளுக்கு சென்றுள்ளார். நேற்று அவர் தனது நைஜீரியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசிலில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை ரியோ டி ஜெனிரோ சென்றடைந்தார். அவருக்கு அந்நாட்டு தலைவர்கள் மற்றும் இந்திய வம்சாவளிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் ஓட்டல் நேஷனலில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் பட்டினி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் – பிரதமர் மோடியும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா தரப்பிலிருந்து அதிபர் ஜோ பைடன் பங்கேற்கிறார். அதிபராக ஜோ பைடன் பங்கேற்கும் கடைசி ஜி-20 மாநாடு என்பதால், இம்மாநாட்டில் அமெரிக்கா என்ன பேசப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
The post ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் மோடிக்கு பிரேசிலில் வரவேற்பு appeared first on Dinakaran.