கடந்த மாதம் 44 நபர்களுக்கு டெங்கு உறுதியான நிலையில், இந்த மாதம் தற்போது வரை 26 நபர்கள் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது. கிராம புறங்களில் பலரும் குடும்பம் குடும்பமாய் காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறினர். 10 நாட்கள் வரையில் பாதிப்பு நீளுவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாள்தோறும் 44 மருத்துவ முகாம்கள் என்ற அடிப்படையில் 1237 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 34,142 பேருக்கு சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 100 நாள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post அதிகரிக்கும் காய்ச்சல்.. புதுக்கோட்டையில் 3 நாட்களில் 139 பேர் மருத்துவமனையில் சிகிச்சை: அவதியில் மக்கள்!! appeared first on Dinakaran.