கேரளாவிற்கு அனுமதியின்றி கனிவளங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் தொடர்பாக தென்மாவட்டங்களில் சுரங்கத்துறை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை

நெல்லை: கேரளாவிற்கு அனுமதியின்றி கனிவளங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் தொடர்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இருந்து போலி ரசீதுகள் மற்றும் அதிகாரிகளின் போலி முத்திரைகள் பயன்படுத்தி கனிமவளங்கள் கடத்தப்படுவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்துவந்தனர். இதற்காக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆங்காங்கே பல இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.

இந்த சூழ்நிலையில், 2 நாட்களுக்கு முன்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் இதற்காக ஒரு பறக்கும் படை குழுவை அமைத்தனர். இதனை தொடர்ந்து பறக்கும் படை குழுவினர் ஆங்காகே சோதனை நடத்தினர். இந்த திடீர் சோதனையில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதி, ரெட்டியார்பட்டி பகுதி, கன்னியாகுமரி மாவட்டம் வலியாற்றுமுகம் பகுதியில் உரிய அனுமதியின்றி கனிமம் ஏற்றி சென்ற லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கேரளாவிற்கு அனுமதியின்றி கனிவளங்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் தொடர்பாக தென்மாவட்டங்களில் சுரங்கத்துறை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: