இதைத்தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இலங்கையின் புதிய பிரதமராக இன்று கலாநிதி ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்றார். அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். மேலும், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரானார்.
விஜித ஹேரத் – வெளிநாட்டு அலுவல்கள்,வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர்
சஞ்சன அபேரத்ன – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர்
ஹர்ஷண நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்
சரோஜா சாவித்திரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் விவகாரம்
கே,டி.லால்காந்த – விவசாயம் ,கால்நடைகள்,காணி மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சராக பதவியேற்றார்.
The post இலங்கை பிரதமனார் கலாநிதி ஹரிணி அமரசூரிய.. அதிபர் திசநாயக முன்னிலையில் புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்..!! appeared first on Dinakaran.