×
Saravana Stores

மின்கசிவால் தீ விபத்து உ.பி. மருத்துவமனை தீ விபத்தில் மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு

லக்னோ: உத்தரபிரதேச அரசு மருத்துவமனை தீ விபத்தில் 11வது குழந்தை நேற்று உயிரிழந்தது. அது நோய் பாதிக்கப்பட்டிருந்ததால் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக விபத்து நேரிட்டதாக தகவல் வௌியானது. மேலும் என்ஐசியுவுக்கு வௌியே வைக்கப்பட்டிருந்த 2 தீயணைப்பு கருவிகளும் கடந்த 2021ம் ஆண்டிலேயே காலாவதியானவை. விபத்து நேரிட்டபோது அங்கிருந்த சைரன்களும் ஒலி எழுப்பவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளடம் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 16 பச்சிளம் குழந்தைகளும், என்ஐசியுவுக்கு வௌியே இருந்த சில குழந்தைகளும் காயங்களுடன் மீட்கப்பட்டு குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வநதனர். இந்நிலையில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒரு பச்சிளம் குழந்தை நேற்று உயிரிழந்தது. இதையடுத்து தீ விபத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. ஆனால் அந்த குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்ததால் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மின்கசிவால் தீ விபத்து உ.பி. மருத்துவமனை தீ விபத்தில் மேலும் ஒரு குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : U.P. ,Lucknow ,Uttar Pradesh ,Government ,Hospital ,Maharani Lakshmibai Government Medical College Hospital ,Jhansi district of ,Dinakaran ,
× RELATED உ.பி. விவசாய நிலத்தில் 1857ம் ஆண்டு வாள், ஆயுதங்கள் கிடைத்தது