×
Saravana Stores

சபரிமலையில் கேரள அரசு பஸ்ஸில் தீ: உயிர்சேதம் தவிர்ப்பு

திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்கி உள்ளன. இதை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சபரிமலைக்கு பக்தர்கள் வரும் பஸ்கள் உள்பட பெரிய வாகனங்கள் பம்பையில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலக்கல்லில் நிறுத்தப்படுகின்றன. நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு பக்தர்கள் செல்வதற்காக கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் பக்தர்களை ஏற்றுவதற்காக பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு ஒரு பஸ் புறப்பட்டு சென்றது.

இந்த பஸ்சில் டிரைவரும், கண்டக்டரும் மட்டுமே இருந்தனர். நிலக்கல்லுக்கும் சாலக்கயத்திற்கும் இடையே வனப்பகுதியில் 30ம் வளைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் இருந்து புகை வந்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர் உடனே பஸ்சை நிறுத்தி கீழே குதித்தார். கண்டக்டரும் பஸ்சிலிருந்து இறங்கி ஓடினார். சிறிது நேரத்தில் அந்த பஸ்சில் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சில் பக்தர்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

 

The post சபரிமலையில் கேரள அரசு பஸ்ஸில் தீ: உயிர்சேதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Govt ,Thiruvananthapuram ,Sabarimala ,Tamil Nadu ,Andhra Pradesh ,Telangana ,Karnataka ,Kerala government ,
× RELATED 3 மணி நேரம் நிற்க வைத்து ராகிங்...