புதுடெல்லி: வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் அல்லது வெளிநாட்டு வருமானத்தை, வருமான வரி தாக்கல் படிவத்தில் வெளியிடத் தவறினால், கருப்பு பண தடுப்பு சட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. 2024-25ம் நிதியாண்டிற்கான சமர்ப்பிக்கப்பட்ட வருமான வரி தாக்கல் படிவத்தில் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டில் சம்பாதித்த வருமானத்தை காட்டத் தவறியவர்களுக்கு நினைவூட்டும் விதமாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ‘முந்தைய ஆண்டில் வரி செலுத்தியவர்கள் தங்கள் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டில் சம்பாதித்த வருமானத்தை கட்டாயம் ஐடிஆர் படிவத்தில் நிரப்பியிருக்க வேண்டும். அந்த வருமானம் வரி வரம்புக்கு கீழே இருந்தாலும், ஏற்கனவே வெளியிட்ட ஆதாரங்கள் மூலமாக வாங்கப்பட்ட வெளிநாட்டு சொத்தாக இருந்தாலும் அதை ஐடிஆரில் வெளியிட வேண்டும். இதை வெளியிட தவறினால், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தாமதமான மற்றும் திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி ’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.
The post வெளிநாட்டு சொத்து, வருமானம் வெளியிட தவறினால் அபராதம்: டிச.31ம் தேதி கடைசி நாள் appeared first on Dinakaran.