லாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்க விழாவில் ஐவகை குழுக்கள் அமைப்பு

 

பெரம்பலூர், நவ.17: பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் நிகழ்வு நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாயக் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் பிரிக்கப்பட்டு, ஐவகை நிலங்களின் பெயர்களை குறிக்கும் விதமாக, குறிஞ்சி நிலத்தின் பெயரில் சிவப்பு கொடியும், முல்லை நிலத்தின் பெயரில் மஞ்சள் கொடியும், மருதம் நிலத்தின் பெயரில் பச்சை கொடியும், நெய்தல் நிலத்தின் பெயரில் ஊதா கொடியும்! பாலை நிலத்தின் பெயரில் வெள்ளை கொடியும் வழங்கி ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டன.

இதில் ஐவகை மாணவர் குழுக்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் செல்வராணி, சின்னசாமி, பாலச்சந்திரன், சிலம்பரசன், அருணா ஆகியோர் மேற்பார்வை யில் மாணவர், மாணவி குழுத் தலைவர்கள் நியமிக் கப்பட்டனர். இந்த ஐவகை மாணவர் குழுஅமைப்பின் மூலம் திறன் வெளிப்பாடு, ஒழுங்கு, கட்டுப்பாடு சிறப் பாக நடைபெற வேண்டும், குழு அமைப்பின் மதிப்பு களை உணர்ந்து செயல் படுவோம்.

கற்றலிலும் வாழ்க்கைத் திறனிலும் சிறந்து விளங்குவோம், ஒற்றுமையுடன் செயல் பட்டு பள்ளியின் பெருமை யை மேம்படுத்த செயல்படுவோம். என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக குழுத் தலை வர்களுக்கு பதவி ஏற்பு மற்றும் கொடி வழங்கப் பட்டது. நிகழ்வில் ஆசிரியர் கள் அனைத்து மாணவ, மாணவிகளும் குழுவாக பிரிக்கப்பட்டனர். குழுவினர் சிறப்பாக செயல்பட பள்ளியின் தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

The post லாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்க விழாவில் ஐவகை குழுக்கள் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: