பெரம்பலூர், நவ.13: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான பாதுகாப்பு ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் நாளை 14ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்பர்ஸ் (SPARSH) மூலம் பாதுகா ப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படை வீரர்கள் (தரைப்படை, கடற் படை, விமானப்படை) மற்றும் சார்ந்தோர்கள் தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்ய, சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் (CDA, Chennai) அலுவலகத்தின் சார்பாக, ஸ்பர்ஸ் (SPARSH) ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம், சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன், IDAS தலைமையில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் தஞ்சாவூர் மாவட்டக் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். உயிர் சான்று அளிக்க இயலாதோர் மற்றும் தவறியோர் அதனை டிஜிட்டல் முறையில் அளித்திட முகாமில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான அனைத்து குறைபாடு களுக்கும் இம்முகாமில் தீர்வு காணப்படும். ஓர் ரேங்க் ஓர் பென்சன் (OROP) ஓய்வூதியம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். மேலும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் ஆதார் விபரங்களை ஸ்பர்சில் பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள இராமசாமி திருமண மண்டபத்தில் நாளை 14 ஆம்தேதி வியாழக்கிழமை காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை நடை பெறும். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்கள் தங்களது படைப்பணிச் சான்று , ஓய்வூதிய கொடுப் பாணை,அடையாளஅட்டை, பான்கார்டு மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் சென்று இந்த அரியவாய்ப்பினை பயன் படுத்திக் கொள்ளுமாறு மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் ஸ்பர்ஸ் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.