தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை அரியலூர், பெரம்பலூருக்கு நாளைமறுநாள்

பெரம்பலூர், நவ.13: பெரம்பலூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, வரும் வழித்தடம், தங்குமிடம், கூட்டம் நடைபெறும் இடம் ஆகியவற்றில் திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், திருச்சி சரகர் டிஐஜி மனோகர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் 15 ஆம்தேதி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கான அரசு நிகழ்ச்சிகளிலும், கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்க வருகை தர உள்ளார். குறிப்பாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சிப்காட் அடிக்கல் நாட்டுவிழா மற்றும் அரியலூர் அருகே கொல்லாபுரம் என்ற பகுதியில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவற்ற அரசு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கவும், மாலையில் பெரம்பலூர் அருகே அரியலூர் சாலையில் உள்ள பூமணம் திருமண மண்டபத்தில், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அரியலூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகள் முடிந்த உடன் காரில் புறப்பட்டு 1.30 மணியளவில் பெரம்பலூர் வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மதிய உணவு அருந்திவிட்டு, ஓய்வுக்குப் பின்னர், மாலை 4 மணிக்கு பெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு, 2026ஆம் ஆண்டு சட்ட மன்ற பொதுத் தேர்தல் குறித்து, வெற்றி பெறுவதற்கான யுக்திகளை வழங்கி பேசுகிறார்.இதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர் வருகை தரும் பெரம்பலூர் அரியலூர் தேசிய நெடுஞ்சாலை, பெரம்பலூர் பாலக்கரை அருகே வந்து தங்கவுள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகம், 2மாவட்ட திமுக நிர்வாகிகளை சந்திக்கக் கூடிய பூமணம் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் ஆய்வுசெய்ய, திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், திருச்சி சரக டிஐஜி மனோகர் ஆகியோர் பெரம்பலூருக்கு வருகை தந்து, பெரம்பலூர் திமுக மாவட்டச்செயலாளர் ஜெகதீசன் மற்றும் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோருடன் கலந்தாலோசித்தனர்.

இந்த ஆய்வின்போது, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன், பெரம்பலூர் (உட்கோட்டம்) டிஎஸ்பி ஆரோக்கியராஜ், பெரம்பலூர் (தனிப்பிரிவு) இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை அரியலூர், பெரம்பலூருக்கு நாளைமறுநாள் appeared first on Dinakaran.

Related Stories: