திருப்பூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு

 

திருப்பூர், நவ.12: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி. இவர் பூதப்பாண்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த வாரம் கிறிஸ்டோபர் சோபி வெட்டி படுகொலை செய்யப்பட்டதோடு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டார்.

வழக்கறிஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் எனக்கோரி திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். இதில் திருப்பூர் மாவட்ட பார் அசோசியேஷன், திருப்பூர் அட்வகேட் அசோசியேஷன், திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் அசோசியேசன் ஆகிய சங்கங்களை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

The post திருப்பூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: