×
Saravana Stores

இடது கண்ணிற்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் : கிரேட்டர் நொய்டாவில் 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை!!

நொய்டா: மருத்துவரின் அலட்சியத்தால், கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய சென்ற ஏழு வயது சிறுவனின் வலது கண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சம்பவம் நவம்பர் 12ம் தேதி ஆனந்த் ஸ்பெக்ட்ரம் மருத்துவமனையில் நடந்துள்ளது. இடது கண்ணில் அடிக்கடி நீர் வழிந்ததால் சிறுவனின் தந்தை நிதின் பாடி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர் ஆனந்த் வர்மா, அவரது கண்ணில் பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும் அதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து, யுதிஷ்டிரர் என்ற சிறுவனுக்கு மருத்துவர் செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொண்டார். வீட்டிற்கு வந்ததும், சிறுவனின் தாய் தவறான கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைக் கவனித்தார். இதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் மருத்துவரை முறையிட்டுள்ளனர், ஆனால் மருத்துவரும், மருத்துவமனை ஊழியர்களும் அவர்களை மிரட்டும் தோனியில் பேசி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

.சிறுவனின் குடும்பத்தினர் மருத்துவமனையில் பிரச்சனை செய்வதாக மருத்துவமனை நிர்வாகம் கௌதம் புத்த நகரின் தலைமை மருத்துவ அதிகாரியிடம் (CMO) புகார் அளித்தனர்.இதனிடையே சிறுவனின் தந்தை, போலீசில் அளித்த தனது புகாரில், மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்யக் கோரியும், மருத்துவமனைக்கு சீல் வைக்கவும் வலியுறுத்தியுள்ளார்.மேலும் விசாரணை தொடங்கியுள்ளதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு ரூ. 45,000 செலவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

The post இடது கண்ணிற்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் : கிரேட்டர் நொய்டாவில் 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை!! appeared first on Dinakaran.

Tags : Greater Noida ,Noida ,Anand Spectrum Hospital ,
× RELATED யு மும்பா அணியுடன் இன்று ‘வாழ்வா சாவா’...