×
Saravana Stores

விவசாயி வங்கிக்கணக்கில் ₹1 லட்சம் அபேஸ் போலீசார் விசாரணை குடியாத்தம் அருகே

குடியாத்தம், நவ.14: குடியாத்தம் அருகே விவசாயியின் வங்கிக்கணக்கில் இருந்து ₹1 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் அடுத்த ராஜகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தரணி(50). நடுப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். நேற்று அதிகாலை தரணி வங்கிக்கணக்கில் இருந்து ₹99 ஆயிரம், அடுத்து ₹1,000 எடுக்கப்பட்டதாக கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால், அந்த பணத்தை எடுப்பதற்கு முன் பைபேசிக்கு ஓடிபி வந்துள்ளது. ஆனால், அவர் ஓடிபி நம்பர் யாருக்கும் கூறவில்லையாம். ஆனாலும், அவரது வங்கிக்கணக்கில் இருந்து பணம் மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தரணி வங்கிக்கு சென்று விசாரித்தபோது ஆன்லைன் பொருட்களை ஆர்டர் செய்து யாரோ பணத்தை நூதன முறையில் எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து விவசாயி தரணி வேலூர் எஸ்பி அலுவலகம் சைபர் கிரைம் போலீஸ் , குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி வங்கிக்கணக்கில் இருந்து நூதன முறையில் ₹1 லட்சம் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post விவசாயி வங்கிக்கணக்கில் ₹1 லட்சம் அபேஸ் போலீசார் விசாரணை குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Tags : Abes ,Kudiatham ,Dharani ,Rajakuppam village ,Nadupettai ,Dinakaran ,
× RELATED ஒடிசாவில் வாட்ஸ் அப் குழு மூலம்...