×
Saravana Stores

பள்ளிகொண்டா அருகே பஞ்சராகி நின்ற சரக்கு வேன் மீது மோதி எதிர் திசையில் பாய்ந்த பஸ்: சென்னை பயணிகள் உயிர் தப்பினர்

பள்ளிகொண்டா, நவ.21: பள்ளிகொண்டா அருகே பஞ்சராகி நின்ற சரக்கு வாகனம் மீது அரசு சொகுசு பஸ் மோதி எதிர்திசையில் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சென்னை பயணிகள் லேசான காயத்துடன் தப்பினர். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இஞ்சி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு சரக்கு வேன் சென்றது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே நள்ளிரவில் வந்தபோது திடீரென வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால் வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு அதன் டிரைவர் பஞ்சர் கடையை தேடிச்சென்றார்.

அப்போது, பெங்களூரில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த தமிழக அரசு சொகுசு பஸ், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஞ்சராகி நின்ற வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் சொகுசு பஸ் எதிர்திசையில் வலதுபுறமாக பாய்ந்து தடுப்பு கம்பிகளை உடைத்தபடி சென்று சர்வீஸ் சாலைக்கு வந்து அங்குள்ள சிலாப் மீது ேமாதி நின்றது. இந்த விபத்தில் பஞ்சராகி நின்ற சரக்கு வேன் கவிழ்ந்து இஞ்சி மூட்டைகள் சாலையில் சிதறியது. பஸ்சில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிகொண்டா போலீசார், பயணிகளை மீட்டு மாற்று பஸ்சில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்துக்குள்ளான வாகனங்களின் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளிகொண்டா அருகே பஞ்சராகி நின்ற சரக்கு வேன் மீது மோதி எதிர் திசையில் பாய்ந்த பஸ்: சென்னை பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Pallikonda ,Chennai ,Hassan district of ,Karnataka ,Chennai Koyambedu ,
× RELATED பள்ளிகொண்டா அருகே 14 வயது சிறுமியை...