×

மாநில அட்டயா பட்யா போட்டி ஸ்காட் பொறியியல் கல்லூரி வெண்கல பதக்கம் வென்றது

வீரவநல்லூர், ஜன.3: மாநில அளவிலான அட்டயா பட்யா போட்டியில் ஸ்காட் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். திருச்சி மாவட்ட அட்டயா பட்யா சங்கம் சார்பில் திருச்சி அடுத்த சோபனாபுரம் அரசு பள்ளியில் மாநில அளவில் அட்டயா பட்யா சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் பங்கேற்ற மாணவர்கள் எபிரோன், அஸ்வின் ராஜ், முருகன், மகேஷ், முருகேசன் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவர்கள், ஊக்குவித்த உடற்கல்வி இயக்குநர்கள் ஆறுமுகநயினார், ஆஸ்கார் ஆகியோரை ஸ்காட் குழுமங்களின் சேர்மன் கிளிட்டஸ் பாபு, கல்லூரி முதல்வர் ஜஸ்டின் திரவியம், நிர்வாக அலுவலர் ஜெயபாண்டி பாராட்டினர்.

The post மாநில அட்டயா பட்யா போட்டி ஸ்காட் பொறியியல் கல்லூரி வெண்கல பதக்கம் வென்றது appeared first on Dinakaran.

Tags : Scott Engineering College ,Attaya Patya ,Veeravanallur ,Attaya ,Trichy District Attaya Patya Association ,Sobanapuram Government School ,Trichy… ,Dinakaran ,
× RELATED கூனியூர், காருகுறிச்சியில் ரூ.16.6 லட்சத்தில் 5 புதிய டிரான்ஸ்பார்ம்கள்